சென்னை: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பீரக்கன்காரணை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சீனிவாசராகவன் தெருவிலுள்ள வீட்டு மாடியில் சூதாட்டம், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை தொடர்நது வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவலளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இச்சூழலில் அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல் துறையினருக்கு தகவல் வந்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது, அங்கு மூன்று நபர்கள் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு வைத்திருந்ததும், சூதாடிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் திருவண்ணாமலையைச் சேர்ந்த விவேகானந்தன்(19), சாலிகிராமத்தைச் சேர்ந்த சரவணன்(33), பெருங்களத்தூரைச் சேர்ந்த ராஜா(25) என்பது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீஸார் முன்பே அறைந்த பெண்
ஒரு மாதத்திற்கு முன்பு பழைய பெருங்களத்தூரில் ஒரு கும்பல் வீடு வாடகை எடுத்து, அதில் சூதாட்டம் விளையாடுவது தெரிந்தும் பெருங்களத்தூர் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் அதை கண்டுகொள்ளாமல் இருந்ததால், அதிரடியாக துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் சோதனை செய்தபோது, சூதாட்டம் விளையாடிய காவல் உதவி ஆய்வாளர் உள்பட 15 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.