திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மாதா குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மகிமை ஆல்வின். இவருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சௌமியா என்பவருக்கும் திருமணமாகி 22 நாட்களே ஆன நிலையில், குடும்ப பிரச்னையால் சௌமியா (25) தற்கொலை செய்துகொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருப்பாலைவனம் காவல் துறையினர், சௌமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 22 நாட்கள் ஆகும் நிலையில் சௌமியா எதற்காக தற்கொலை செய்துகொண்டார், வரதட்சணை பிரச்னையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் அவரது கணவர் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணம் செய்துகொள்ளுமாறு சிறுமியை வற்புறுத்தியவர் கைது!