ETV Bharat / crime

மகளைக் காதலித்த இளைஞரைக் கொன்ற தந்தை உள்பட நால்வர் கைது - The father who killed the young man who fell in love with his daughter has been arrested

ராமநாதபுரத்தில் மகளைக் காதலித்த இளைஞரைக் கொலைசெய்த தந்தை உள்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மகளைக் காதலித்த இளைஞரைக் கொன்ற தந்தை உள்பட நால்வர் கைது

author img

By

Published : Sep 11, 2021, 11:50 AM IST

ராமநாதபுரம் அருகே காட்டூரணியைச் சேர்ந்த கொத்தனார் முனியசாமி (46) என்பவரின் மகள் தீபிகா. இவரை அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர் காதலித்தார். இவர் வெளிநாடு சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பி கார் வாட்டர் சர்வீஸ் நிலையத்தில் வேலை பார்த்துவந்தார்.

கடந்த சில நாள்களுக்கு முன், நவீன்குமார் தீபிகாவைப் பார்க்க வீட்டிற்கு வந்தார். இதனால் நவீன்குமாரை முனியசாமி தாக்கினார். இது தொடர்பாக ஊர் முக்கியப் பிரமுகர்கள் சமரசம் செய்துவைத்தனர்.

இந்நிலையில் நவீன்குமார்-தீபிகா காதல் நீடித்தது. இதனால் நவீன்குமார் மீது முனியசாமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனையடுத்து நவீன்குமாரைத் தீர்த்துக்கட்ட முனியசாமி முடிவுசெய்தார்.

கிழக்குக் கடற்கரைச் சாலை மாடக்கொட்டான் விலக்கு சாலைப் பகுதியில் நவீன்குமார் நேற்று முன்தினம் இரவு வந்துகொண்டிருந்தார்.

அப்போது, அவரைச் சுற்றிவளைத்து முனியசாமி, அவரது மகன் சந்தோஷ் (19), நாராயணன் மகன் சந்துரு (19), முருகன் மகன் தீபன் (18) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டினர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீன்குமார் மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து நவீன் குமாரின் தாயார் குஞ்சரம் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முனியசாமி, அவரது மகன் சந்தோஷ் உள்ளிட்ட நான்கு பேரை கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: கணவனைக் கொன்று நாடகமாடியது அம்பலம்: பெண்ணும் ரவுடிக்காதலனும் கைது

For All Latest Updates

TAGGED:

crime Murder
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.