ETV Bharat / crime

பாஜக நிர்வாகி கணக்கை ஹேக் செய்த சொந்த கட்சி நிர்வாகி கைது! - cyber crimes in tamil nadu

பேஸ்புக் கணக்கை ஹேக் செய்து அதில் தவறான தகவல் வெளியிட்டதாக திருச்சிராப்பள்ளி பாஜக நிர்வாகியை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

tamil nadu cyber crime police, hacking facebook account, பேஸ்புக் ஹேக், பாஜக நிர்வாகி கைது, பாஜக குற்றங்கள், bjp crime, cyber crimes in tamil nadu, தமிழ்நாடு சைபர் குற்றங்கள்
பாஜக பெண் நிர்வாகி கைது
author img

By

Published : Nov 6, 2021, 7:13 PM IST

திருச்சிராப்பள்ளி: மாவட்ட பாஜக செயலாளராக இருக்கும் காளீஸ்வரன் என்பவரது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அவர் குறித்து தவறாக சித்தரித்து பதிவுகள் வெளியானது.

இதுகுறித்து, திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் காளீஸ்வரன் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் காளீஸ்வரன் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்து தவறான பதிவுகளை வெளியிட்டது, திருச்சி பாஜக விவசாய அணி பிரிவைச் சேர்ந்த கருமண்டபம் திலகா (50) என்பது தெரியவந்தது.

மேலும், இவருக்கு உதவியாக மதுரையைச் சேர்ந்த ரவிக்குமாரும் சைபர் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த சைபர் கிரைம் காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் நகைக்கடன் நிறுவனத்தில் போலி நகைகள் மூலம் மோசடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.