ETV Bharat / crime

திருவண்ணாமலை காவல் துணை ஆய்வாளர் வீட்டில் பெண் தீ வைப்பு!

திருவண்ணாமலையில் காவல் துணை ஆய்வாளர் வீட்டிற்குள் முகமூடி அணிந்துவந்த பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் கார், 2 பைக்குகள் எரிந்து கருகின. சிசிடிவி கேமராவில் பதிவான அப்பெண்ணை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

திருவண்ணாமலை காவல் துணை ஆய்வாளர் வீட்டில் தீ வைப்பு

author img

By

Published : Jun 20, 2021, 9:22 PM IST

திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் காவல் துணை ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர், சுந்தர். இவர் திருவண்ணாமலை மத்தலாங்குளம் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்றிரவு (ஜுன் 19) அனைவரும் வீட்டின் மூன்றாவது மாடியில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

திடீர் தீ

இந்நிலையில் இன்று (ஜுன் 20) அதிகாலை இவரது வீட்டு போர்டிகோவில் நிறுத்தியிருந்த கார், 2 பைக்குகள் மற்றும் வீட்டின் கதவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அப்போது, சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த காவல் துணை ஆய்வாளர் சுந்தர் மற்றும் குடும்பத்தினர் அலறியடித்து வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.

பின்னர் உடனடியாக திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
அதற்குள் கார், 2 பைக்குகள் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும், வீட்டின் சுவர் மின் சாதனங்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்

அப்போது, அங்கு பெட்ரோல் கேன் இருந்ததைக் கண்டனர். யாரோ அடையாளம் தெரியாத ஆசாமிகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்தத் தெருவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானக் காட்சிகளை ஆய்வுசெய்தனர்.

அதில் சுடிதார் அணிந்த பெண் ஒருவர் துப்பட்டாவால் தனது முகத்தை மூடியபடி வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே வருவதும், பின்னர் கேனில் இருந்த பெட்ரோலை கார் மற்றும் பைக்குகள் மீது ஊற்றிவிட்டு, கேட்டை மூடிவிட்டு வெளியேவும் செல்கிறார்.

பின்னர் வெளியில் நின்றபடி தீக்குச்சியை கொளுத்தி கார், பைக்குகள் மீது வீசிவிட்டு தப்பியோடுவதும் பதிவாகியுள்ளது.

தீ வைத்த பெண் யார்?

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவுசெய்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண் யார்? தீ வைப்புக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.