தூத்துக்குடி: அண்ணா நகர் 6-ஆவது தெருவை சேர்ந்தவர் ராம்குமார் லாரி டிரைவர். இவரது மனைவி மாரியம்மாள் அதே பகுதியில் வசித்து வரும் மாரியம்மாளின் அண்ணன் முருகேசன் என்பவர் வீட்டை விலைக்கு வாங்கி குடியிருந்து வருகிறார். இந்த வீட்டை விலைக்கு வாங்கியது தொடர்பாக மாரியம்மாள் குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் முருகேசன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இருவரும் அண்ணாநகர் 6-ஆவது தெருவில் வைத்து ராம்குமாரை ஓட ஓட விரட்டி கொலை செய்து விட்டு வீட்டிலிருந்த தங்கை மாரியம்மாளையும் இருவரும் சேர்ந்து வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்த பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த தென்பாகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தனி பிரிவு போலீசார் மெத்தன போக்குடன் செயல்பட்டு வருவதால் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் பகுதியில் தொடர் படுகொலை சம்பவம் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆவின் பால் பாக்கெட்டில் இரண்டு விலை பட்டியல்!