ETV Bharat / crime

திருமணம் நடக்க பூஜை செய்ய வேண்டும் - இரண்டு சவரனை அபேஸ் செய்த சில்வர் திருடன்

பல்லாவரம் அருகே திருமணம் நடக்க பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி இரண்டு சவரன் தங்க நகையை திருடிச் சென்ற பிரபல சில்வர் திருடர் சீனிவாசனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

silvar srinivasan
சில்வர் திருடர் சீனிவாசன்
author img

By

Published : Jan 9, 2022, 6:37 AM IST

சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் ஐயப்பா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (76). இவருக்கு சௌந்தரி (66) என்ற மனைவியும், ஸ்ரீராம் (41) என்ற மகனும் உள்ளனர். இவரது மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில், ஸ்ரீராமுக்கு திருமணத்திற்கு பெண் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளனர். இந்த விளம்பரத்தைப் பார்த்த 60 வயது முதியவர் ஒருவர் பம்மலில் உள்ள ஸ்ரீராம் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சில்வர் திருடர் சீனிவாசன்

முதியவர் திட்டம்

அங்கு சென்ற முதியவர், உங்கள் மகனுக்கு தோஷம் இருக்கிறது. இவருக்கு திருமணம் நடைபெற வேண்டுமென்றால் தங்கச்சங்கிலியை மஞ்சள் துணியில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

அதனை நம்பிய ஸ்ரீராமின் பெற்றோர், இரண்டு சவரன் தங்க சங்கிலியை முதியவரிடம் கழற்றி கொடுத்துள்ளனர். அதை வாங்கிய அவர் பூஜை செய்வது போல் நடித்து, மூன்று நாள்களுக்குப் பிறகு தான் பூஜை அறையில் இருந்து பொருள்களை எடுக்க வேண்டும் என கூறிவிட்டு நூதன முறையில் நகையை திருடிச் சென்றுள்ளார்.

காணமல் போன தங்கச் சங்கிலி

பின்னர் சீனிவாசன், சௌந்தரி தம்பதி பூஜை அறையில் சென்று தங்க செயினை பார்த்தபோது, அது திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதி உடனே சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், முதியவர் சென்ற இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்துள்ளனர். பின்னர் அவர் பிரபல சில்வர் பொருள்கள் திருடர் சீனிவாசன் எனத் தெரியவந்தது.

சில்வர் சீனிவாசன் எஸ்கேப்

மேலும் விசாரணை செய்ததில், அவர் மீது சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதும், அவர் பல ஆண்டுகளாக வெள்ளி பொருள்களை மட்டும் குறிவைத்து திருடி வந்ததும் தெரியவந்தது.

தற்போது சங்கர் நகர் காவல்துறையினர் சில்வர் திருடர் சீனிவாசனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறுவதில் கோடிக்கணக்கில் முறைகேடு: தொண்டு நிறுவனம் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.