புதுடெல்லி: டெல்லியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட அழகிகள் 7 பேர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தேசிய தலைநகர் டெல்லியின் தென்மேற்கு மாவட்டத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் பாலியல் தொழில் அமோகமாக நடைபெற்றுவருவதாக காவலர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் போலீசார் சம்பவ பகுதியில் தீவிர நோட்டமிட்டனர். அப்போது ஓட்டலுக்குள் புதிது புதிதாக ஆள்கள் நடமாட்டம் இருப்பதை கண்டுகொண்டனர்.
இந்த நிலையில் மாறுவேடத்தில் திடீரென உள்ளே சென்ற போலீசார், அங்கிருந்த ஊழியர்களிடம் பேச்சு கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் 7 பேரை மீட்டனர்.
தொடர்ந்து மேலும் 7 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் ஓட்டல் மேலாளரும் ஒருவர் ஆவார். கைது செய்யப்பட்ட நபர்களிடம் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில்: கேரள பெண்கள் உள்பட 14 பேர் கைது