படப்பை பகுதியில் சாலையின் இருப்புறங்களிலும் சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக மந்த கதியில் நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தால், கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் ஒரகடம் பகுதியில் இருந்து கனரக வாகனத்தில் கருங்கல் ஏற்றிக் கொண்டு, வண்டலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் நடுப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் மீது கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வாகன ஓட்டுநர் சிறு காயங்களுடன் நல் வாய்ப்பாக உயிர் தப்பினார். மேலும் இதுபோன்ற தொடர் சாலை விபத்துகளை தடுக்கும் விதமாக, சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கார், பைக் மோதி கோர விபத்து: ஒருவர் பலி, 8 பேர் படுகாயம்