ETV Bharat / crime

செல்போன் விளையாட்டு: தந்தை திட்டியதால் மகன் தற்கொலை! - madurai latest news

செல்போனில் விளையாடியதற்காக தந்தை திட்டியதால் பள்ளிச் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

suicide
suicide
author img

By

Published : Jul 24, 2021, 6:16 AM IST

மதுரை: முத்துப்பட்டி அருகே ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரின் மகன் ஜெயபிரசாத் (10). ஆனையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

ஜெயபிரசாத்துக்கு பள்ளியின் சார்பாக இணையவழியில் வகுப்புகள் நடந்து வந்த நிலையில், அதில் கவனம் செலுத்தாமல் செல்போனில் கேம் விளையாடியதாகக் கூறப்படுகிறது. இதற்காக தந்தை ரஞ்சித்குமார் மகனை கண்டித்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த பிரசாத் நேற்றுமுன்தினம் (ஜூலை 22) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மும்பையில் கட்டடம் இடிந்து விபத்து: மூவர் மரணம், எழுவர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.