ETV Bharat / crime

குற்றப்பிரிவு போலீஸிடம் எஸ்.வி. சேகர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! - சென்னை மாவட்ட செய்திகள்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாகப் பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

S Ve Sekar Women Journalist Disrespect Case

author img

By

Published : Mar 25, 2022, 4:05 PM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.

இதுதொடர்பாக, சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்டப்புகாரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் உள்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

மீண்டும் மன்னிப்பு கேட்கத் தயார்: இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை நீக்கப்பட்டுவிட்டதாகவும்,இதுதொடர்பாக மன்னிப்பும் கேட்கப்பட்டதாகவும், நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்புக்கேட்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தையே தாம் பகிர்ந்ததாகவும், அதற்காக உடனடியாக மன்னிப்பும் கேட்கப்பட்டதாகவும், வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் கூறப்பட்டது.

யார் அந்த அமெரிக்க வாழ் தமிழர்: காவல் துறை தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முறைமுறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஏப்ரல் 2ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்டுள்ளார். அப்போது, பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி ஃபேஸ்புக்கில் எழுதிய அமெரிக்க வாழ் தமிழர் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: போக்குவரத்து தலைமை காவலரை பாராட்டி பரிசளித்த கலெக்டர் மகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.