புதுச்சேரியைச் சேர்ந்தவர் ரவுடி ஜெரோம் (33). இவர் மீது புதுச்சேரியில் நான்கு கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில், ரவுடி அன்பு ரஜினியை ஜெரோம் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து புதுச்சேரியில் கொலை செய்த வழக்கில் கைதாகினர்.
பிணையில் வெளிவந்த ரவுடி ஜெரோம் சென்னை வெட்டுவாங்கனி நியூ கணேஷ் நகர் பகுதியில் தலைமறைவாக வசித்து வந்துள்ளார். ஜெரோம் பதுங்கியிருப்பதை தெரிந்துகொண்ட அன்பு ரஜினியின் கூட்டாளிகள், ஜெரோமை நோட்டமிட்டனர். பின்னர் எட்டுபேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் ரவுடி ஜெரோமை ஓட ஓட விரட்டி சரமாரியாக ஆயுதங்களைக் கொண்டு வெட்டி விட்டு தப்பியோடினர்.
இதில் படுகாயமடைந்த ஜெரோம் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை காவல்துறையினர் ஜெரோமின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கொலை செய்துவிட்டு தப்பியோடிய எட்டு நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குழந்தை இல்லாத விரக்தியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!