ETV Bharat / crime

ஆன்லைன் பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் சிக்கிய இரண்டு சிறுமிகள் மீட்பு! - pocso act

ஈரோட்டில் ஆன்லைன் பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் சிக்கிய இரண்டு சிறுமிகளை காவல் துறையினர் மீட்டனர். இதற்கு தரகராக இருந்த அங்குசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆன்லைன் பாலியல் தொழில்
ஆன்லைன் பாலியல் தொழில்
author img

By

Published : Nov 3, 2021, 3:50 PM IST

ஈரோடு: பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் சொகுசு விடுதியில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவரது தலைமையில் தனிப்படை காவல் துறையினர் ஈரோடு பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் சொகுசு விடுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருப்பூர், பவானி பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பாலியல் தொழில் நடந்த இடம்
பாலியல் தொழில் நடந்த இடம்

பின்னர், அந்த சிறுமிகளை தனிப்படை காவல் துறையினர் மீட்டனர். இந்த சிறுமிகளை பணத்திற்காக பாலியல் தொழில் ஈடுபடுத்திய திருப்பூரைச் சேர்ந்த அங்குசாமி என்பவர் கைது செய்தனர்.

விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுமிகளும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் என்பதால் அங்குசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்ய சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: என் வழி; தனி வழி... சீண்டாத: காளையை வம்பிழுத்த மூதாட்டிக்கு நேர்ந்த கதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.