ETV Bharat / crime

பா.ம.க நிர்வாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் !! - People protest against the release of the BJP

தரங்கம்பாடி அருகே விபத்தை ஏற்படுத்திய பா.ம.க நிர்வாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டதை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பா.ம.க நிர்வாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டதை கண்டித்தும் மக்கள் போராட்டம் !!

author img

By

Published : May 15, 2021, 9:37 AM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே சிங்கானோடையில் நேற்று முன்தினம் (மே.13) அதிவேகமாக சென்ற கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கீரை வியாபாரி ஆணைக்கோயில் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் உயிரிழந்தார்.

இதுதொடர்பான விசாரணையில், காரை ஓட்டி சென்றவர், அனந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த பா.ம.க மாநில துணை தலைவர் முத்துக்குமார் என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

பா.ம.க நிர்வாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் !!

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய முத்துக்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்யக்கோரியும், இறந்த சுப்ரமணியன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரியும் பொறையார் காவல் நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சுப்ரமணியன் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதனையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: 'நைட்ரஜன் உற்பத்தி நிறுவனங்களில் விரைவில் ஆக்ஸிஜன் உற்பத்தி' - அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.