ஹரியானா மாநிலம் குருகிராமில் போதை பொருள் கடத்தி விற்கப்படுவதாக மானேசர் குற்றப்பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை அடுத்து சோதனை செய்த காவல் துறையினர் 4.5 கிலோ போதை பொருளை வைத்திருந்த பிகாரை சேர்ந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவரின் பெயர் மனோஜ் குமார் மகாடோ என்பது தெரியவந்துள்ளது.
போதை பொருள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். முன்னதாக விசாரணையில், போதை பொருள் விற்பவரிடமிருந்து கிலோ 3,000க்கு மரிஜுவானாவை வாங்கினேன் என அவர் தெரிவித்தார். இதற்கு முன்பு அவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளரா? என காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.