ஈரோடு: அந்தியூர் அடுத்த பர்கூர் வனச்சரகத்திற்குள்பட்ட பெரியூர் காவல் எல்லையில் வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரும்பு கண்ணி வலையுடன் சுற்றி திரிந்த நபரிடம் வனத் துறையினர் விசாரனை செய்தனர். விசாரணையில், ஜுயன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னமாதன் மகன் மாரசாமி என்பது தெரியவந்தது.
இவர் காட்டு முயலை வேட்டையாட கண்ணி வலையுடன் சுற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவரை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்து, இரும்பு கண்ணி வலையை பர்கூர் வனத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து, ஈரோடு மாவட்ட வன அலுவலர் விஷ்மிஜு விஸ்வநாதன் உத்தரவின்படி மாரசாமிக்கு வனத் துறையினர் ரூ.20ஆயிரம் அபராதம் விதித்தனர்.