ETV Bharat / crime

விடிந்தால் கல்யாணம்; மணமகனை கொன்ற தந்தை - மதுரையில் சோகம் - near madurai bride was murdered by his father

மதுரை அருகே திருமணத்தை வைத்துக் கொண்டு தன்னிடம் தகராறு செய்த மணமகனை வெட்டிக்கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

மணமகனை கொன்ற தந்தை
மணமகனை கொன்ற தந்தை
author img

By

Published : Jul 11, 2021, 10:57 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யனக்கவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன்(49). இவருக்கு ராணி என்ற மனைவியும் சுபாஷ் (22), பிரதீப் (22) ஆகிய இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இன்று பிரதீப்புக்கும் அவரின் உறவினர் பெண் ஒருவருக்கும் திருமணம் நடத்த பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், பிரதீப் நேற்று (ஜூலை 10) மாலை மது குடித்து விட்டு தனது நண்பர்களுக்கு மது விருந்து நடத்த வேண்டும் என தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதற்கு தந்தை இளங்கோவன் பிரதீப்பை கண்டித்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

அப்போது ஆத்திரமடைந்த பிரதீப் அங்கிருந்த கோடாரியை எடுத்து இளங்கோவனை வெட்ட முயன்றார். அதை இளங்கோவன் பறித்து கைப்பிடியால் திருப்பி அடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக பிரதீப் கழுத்தில் கோடாரி வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

இச்சம்பவம் தொடர்பாக வாடிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராதா மகேஷ் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருமணம் நடைபெற வேண்டிய நேரத்தில் மணமகன் தந்தையாரால் எதிர்பாராதவிதமாக கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மதுரை அருகே இளைஞர் படுகொலை: போலீசார் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.