ETV Bharat / crime

தவறுதலாக துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறி கல்லூரி மாணவர் உயிரிழப்பு - துப்பாக்கி சூடு

ஹைதராபாத்திலுள்ள வீட்டில் உறவினர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது கை தவறி துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறியதில், கல்லூரி மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார். பின், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Man dies in air gun misfire in Telangana

author img

By

Published : Nov 4, 2021, 8:29 PM IST

ஹைதராபாத் (தெலங்கானா): துப்பாக்கியில் இருந்து தவறுதலாக குண்டு வெளியேறி, மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏர் கண் கொண்டு உறவினர்களுடன் விளையாடுகையில், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டத்தில் உள்ள, சலக்பூர் கிராமத்தில் இந்த கோர நிகழ்வு நடந்துள்ளது.

உறவினர்களுடன் 20 வயதுடைய கல்லூரி மாணவர் முஷாபா, ஏர் கண் துப்பாக்கியுடன் நள்ளிரவில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, தவறுதலாக முஷாபா மீது குண்டடிபட்டுள்ளது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கக் கூறியுள்ளனர்.

உடனடியாக முஷாபா அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், துப்பாக்கிச் சூடுக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விடிய விடிய மது விருந்து - குடித்த மூவரும் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.