ETV Bharat / crime

முன்னாள் அமைச்சர் வீட்டில் அள்ள அள்ள குறையாத பணம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையில், 34 லட்ச ரூபாய், 4.9 கிலோ தங்கம், 9 சொகுசு கார்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி
முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி
author img

By

Published : Sep 17, 2021, 6:14 AM IST

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரான கே.சி. வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் அவர் மீது செப். 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

அதடிப்படையில் நேற்று (செப். 16) வீரமணிக்கு தொடர்புடைய இடங்கள், அவரது பங்குதாரர்களின் நிறுவனங்கள், முன்னாள் அரசியல் நேர்முக உதவியாளரின் பெங்களூரில் உள்ள 2 இடங்கள், சென்னையில் 6 இடங்கள் என மொத்தம் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 10 மணி நேரமாக நடந்த இந்த சோதனையின் முடிவில், கணக்கில் காட்டப்படாத பணமான ரூ.34 லட்சத்து 1,060 ரொக்கம், 1.80 லட்சம் அந்நிய செலாவணி டாலர், 9 சொகுசு கார்கள், 4.987 கிலோ தங்கம், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள், 5 கணினிகள், ஹார்டு டிஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: 654 விழுக்காடு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த கே.சி வீரமணி - லஞ்சஒழிப்புத் துறை!

மேலும் சொத்து குவிப்பில் ஈடுபட்டதற்கான முக்கிய ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக கே.சி வீரமணி வீட்டு வளாகத்தில் 30 லட்சம் மதிப்பிலான சுமார் 275 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு அதற்கான விசாரணையும் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து கே.சி வீரமணியிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.