இந்திய கடற்படையைச் சேர்ந்த ஸ்வர்னா கப்பலில், கடற்படையினர் அரபிக்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடலில் சந்தேகத்துக்கு இடமான மீன்பிடி கப்பல் ஒன்று சென்றுகொண்டிருப்பது கண்டறிப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த மீன்பிடி கப்பலை நோக்கி சென்ற கடற்படையினர், அதில் பயணித்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து சோதனை நடத்தியதில் சுமார் 300 கிலோ எடையுடன் பல்வேறு போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 3 ஆயிரம் கோடி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து மீன்பிடி கப்பலில் பயணித்தவர்கள் விசாரணைக்காக கொச்சி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
மக்ரன் கடற்பகுதியில் தொடங்கி இந்தியா, மாலத்தீவு, இலங்கை பகுதிகளுக்கு செல்லும் கடற்பரப்பில் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் அதிகமாக நிகழும் எனக் கூறப்படும் நிலையில், உலகச் சந்தையில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிக மதிப்பில் போதைப் பொருள்கள் இந்திய கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவை, போதைப் பிரியர்களுக்கு மட்டுமல்லாமல், தீவிரவாதம், சட்டவிரோத செயல்களுக்கும் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் கடத்தல், வழிப்பறி!