ETV Bharat / crime

குழந்தைகளை வைத்து ஆபாசப் படங்கள் - குற்றவாளிகளுக்கு வலைவீசும் சிபிஐ - ஆபாச படங்கள்

குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்த்தல், பகிர்தல், பதிவிடுதல் தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில் 100 நாடுகளைச் சேர்ந்த நபர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும், 5000 பேர் குற்றச் செயலில் ஈடுபடுவதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

illegal porn issue
illegal porn issue
author img

By

Published : Nov 17, 2021, 1:23 PM IST

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் குழந்தைகளை வைத்து ஆபாசப் படங்கள் எடுப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் ஆபாசப் படங்கள் பார்ப்பது, பகிர்வது, வைத்திருப்பது உள்ளிட்டவையும் குற்றம் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குறிப்பாக கடந்தாண்டு தலைநகர் டெல்லியில் குழந்தைகளை வைத்து ஆபாசப் படம் எடுத்து, அதைப் பதிவேற்றியதாக ஒரு கும்பலை டெல்லி காவல் துறையினர் கைதுசெய்தனர்.

அதேபோல, சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்த்தது, சமூக வலைதளங்களில் பகிர்ந்தது தொடர்பாக பலர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு எனத் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு குழந்தைகளின் ஆபாசப் படங்களை அதிக அளவில் பார்த்து, பகிர்பவர்கள் தொடர்பான விவரங்கள் ஐ.பி. முகவரி மூலம் பட்டியலிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தமிழ்நாடு காவல் துறைத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் குழந்தைகளை வைத்து ஆபாசப் படம் எடுக்கும் மாஃபியா கும்பல்கள், பல்வேறு நாடுகளிலிருந்தும் செயல்பட்டுவந்ததன் காரணமாக, இவ்விவகாரம் தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு, சிபிஐ அலுவலர்கள் தனித்தனியே 23 வழக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.

மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் டெல்லி, பிகார், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு, ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா, உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சேர்ந்த 83 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து, அதில் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில், குழந்தைகளை வைத்து ஆபாசப் படங்கள் எடுப்பவர்கள், பார்ப்பவர்கள், பகிர்பவர்கள் தொடர்பாக கிடைத்த பல்வேறு துப்புகளின் அடிப்படையில் குழந்தைகளின் ஆபாசப் படங்களை மட்டும் பகிர்வதற்காக வாட்ஸ்அப் குழு ஒன்றை வைத்து இயக்கிவந்தது தெரியவந்தது.

அதனடிப்படையில் இந்த வாட்ஸ்அப் குழுவில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பகிரும் எண்ணை டிராக் செய்து, தமிழ்நாட்டில் ஆறு இடங்கள் உள்பட நாடு முழுவதும் 77 இடங்களில் சிபிஐ அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக தமிழ்நாட்டின் திருவள்ளூர், சேலம், திருப்பூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களில் இந்தச் சோதனையை சிபிஐ அலுவலர்கள் மேற்கொண்டனர்.

இந்த அதிரடி சோதனையில் கைப்பற்றப்பட்ட மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை ஆய்வுசெய்ததில் குழந்தைகள் ஆபாசப் படங்கள் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்கள், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான காணொலிகள், பதிவுகள் எனக் குற்றச் செயலில் 5000 பேருக்குத் தொடர்புடையதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பல குழுக்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த நபர்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 100 நாடுகளைச் சேர்ந்த நபர்களுக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ கண்டுபிடித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. சிபிஐ பல்வேறுவிதமான விசாரணை அமைப்புகளுடன் இணைந்து விசாரணையைத் தொடர்ந்துவருவதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை - சாட்சியளித்த அரசு மருத்துவமனை செவிலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.