ETV Bharat / crime

நம்பிக்கை மோசடி: பணம், நகைகளை திருடிய தம்பதி கைது! - குற்றச் செய்திகள்

சென்னை: பொழிச்சலூர் பகுதியில் பணம், நகைகளை திருடிய தம்பதியை காவல் துறையினர் கைது செய்தனர்.

பணம், நகைகளை திருடிய தம்பதி கைது
பணம், நகைகளை திருடிய தம்பதி கைது
author img

By

Published : Jun 11, 2021, 7:08 PM IST

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் சிவசங்கர் நகர்தண்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரை (38). இவர், மிக்ஸி கிரைண்டர் போன்ற பொருள்களை தவணை முறையில் விற்பனை செய்து வருகிறார்.

கடந்த மே 2 ஆம் தேதி, விழுப்புரத்திலுள்ள துரையின் தாய் இறந்து விட்டதாகத் தகவல் வந்ததும், துரை உடனே வீட்டைப் பூட்டிவிட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் நந்தினியிடம் (28) சாவியைக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

ஒரு மாதம் கழித்து, ஜூன் 7ஆம் தேதி வீட்டுக்கு துரை வந்தார். பின்னர், கடைக்குச் செல்வதற்காகப் பீரோவிலிருந்த பணத்தை எடுக்க சென்றபோது, அதிலிருந்த 84 ஆயிரம் ரூபாய் பணம், 3 1/4 சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து சங்கர் நகர் குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரில், எப்போதும் பணத்தை எண்ணிவிட்டு, பணத்தின் முதல் தாளில் எவ்வளவு பணம் என்று எழுதி, அவரது கையெழுத்தைப் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதேபோன்று திருடு போன 84 ஆயிரம் ரூபாய் பணத்தின் முதல் தாளிலும், எவ்வளவு பணம் என்பதை குறிப்பிட்டு கையெழுத்து போட்டுள்ளதாகப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக துரை ஊருக்குச் செல்லும் பொழுது சாவி கொடுத்த நந்தினியிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் வீட்டைத் திறக்கவில்லை எனவும், காணாமல் போனது குறித்து தனக்கும் எதுவும் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், பொழிச்சலூர் பகுதியில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்களை நந்தினியின் கணவர் உமாசங்கர் (30), வாங்குவதற்காக அங்குச் சென்று பணத்தை கொடுத்து மது பாட்டில்களை வாங்கியுள்ளார். அதே இடத்தில், துரையின் நண்பர் பணம் கொடுத்து மது பாட்டில்களை வாங்கியப் பிறகு, மீதமுள்ள தொகையை கொடுத்துள்ளார்.

மீதம் கொடுக்கப்பட்ட பத்து ரூபா நோட்டில் 4 ஆயிரத்து 500 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டு, துரையின் கையெழுத்து போடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து துரைக்குத் தகவல் தெரிவிக்க, அவர் சம்பவ இடத்துக்கு வந்து மது விற்பனை செய்தவரிடம் கேட்டபோது உமாசங்கர் தான் பணத்தை கொடுத்ததாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு துரை தகவல் தெரிவித்தார். இதன்பேரில் நந்தினி, அவரது கணவர் உமாசங்கர் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், பணத்தை திருடியதாக ஒப்புக் கொண்டனர்.

விசாரணைக்கு பின்பு, அவர்களிடமிருந்த 34 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், 2 வெள்ளி கொலுசு, 3 1/4 சவரன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.