ETV Bharat / crime

காதலை நிராகரித்ததால் சோகம்: 22 கத்திக் குத்து வாங்கிய பெண்! - Love murders

மலப்புரத்தில் காதலை நிராகரித்த பெண்னை இளைஞர் ஒருவர் 22 முறை கத்தியால் குத்தியதாக உடற்கூராய்வு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

கொலை வழக்கு
கொலை வழக்கு
author img

By

Published : Jun 18, 2021, 3:59 PM IST

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் மலப்புரத்தில் காதலை நிராகரித்த காரணத்திற்காக கொலை செய்யப்பட்ட த்ரிஷ்யா என்ற பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கை வெளிவந்துள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில், குற்றஞ்சாட்டப்பட்ட வினீஷ் என்ற இளைஞர் அப்பெண்னை 22 முறை கத்தியால் குத்தியுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இறப்புக்கான காரணம், உடலின் உள்புறத்தில் ரத்தப் போக்கு ஏற்பட்டதுதான். த்ரிஷ்யாவின் மார்பில் நான்கு குத்து காயங்களும், அடிவயிற்றில் மூன்று குத்தப்பட்ட காயங்களும் கிடைத்தன. அவரின் கைகளிலும் உடலின் பல்வேறு பாகங்களிலும் காயங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் நடந்த அன்று, த்ரிஷ்யாவின் தந்தைக்கு சொந்தமான கடைக்கு வினீஷ் தீ வைத்துள்ளார். பின்னர் த்ரிஷ்யாவின் வீட்டை அடைய சுமார் 15 கி.மீ வினீஷ் நடந்தே சென்றுள்ளார். விடியற்காலை வரை வீட்டின் அருகே பதுங்கி இருந்து, வேறு யாரும் இல்லை என்பதை உறுதிசெய்து நேற்று(ஜூன்.17) காலை 8:30 மணியளவில் த்ரிஸ்யாவின் அறைக்குள் நுழைந்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

முன்னதாக, த்ரிஸ்யாவை வினீஷ் தொந்தரவு செய்ததற்காக அவரது குடும்பத்தினர் ஏப்ரல் மாதம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நபரை கூட்டாளியுடன் கொலை செய்த காதலன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.