ETV Bharat / crime

இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வுசெய்த கடையின் உரிமையாளர்கள்! - கற்பழிப்பு செய்திகள்

வேலைக்குச் சேர்ந்த இளம்பெண்ணை அடுமனை (பேக்கரி) கடையின் உரிமையாளர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது குறித்து பெண் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினர் மூவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

rape news tamil
rape news tamil
author img

By

Published : Jun 18, 2021, 9:06 AM IST

கோயம்புத்தூர்: அடுமனைக் கடையில் வேலை செய்த பெண்ணை, அதன் உரிமையாளர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அன்னூர் பட்டயகாரன் புதூரில் மூவர் அடுமனை நடத்திவருகிறார்கள். இவர்களது கடையில் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த 21 வயது பெண்ணும், அவரது கணவரும் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக கடை பூட்டப்பட்டதால் இளம்பெண்ணின் கணவர் வேறு வேலைக்குச் சென்றுள்ளார். இச்சூழலில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கடையின் உரிமையாளர்கள் மூன்று பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், இதில் சம்பந்தப்பட்ட இருவரை துடியலூர் மகளிர் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரைத் தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.