ETV Bharat / crime

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்யக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு - நீதிமன்ற செய்திகள்

Former minister Manikandan, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கு, நடிகை சாந்தினி வழக்கு, முன்னாள் அதிமுக அமைச்சர் பாலியல் வழக்கு, அமைச்சர் பாலியல் வழக்கு, மணிகண்டனை கைது செய்ய தடை, நீதிமன்ற செய்திகள், சென்னை உயர் நீதிமன்ற செய்திகள்
நடிகை பாலியல் வழக்கு
author img

By

Published : Jun 3, 2021, 3:24 PM IST

Updated : Jun 3, 2021, 6:23 PM IST

15:22 June 03

சென்னை: பாலியல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9 ஆம் தேதி வரை கைது செய்ய கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட துணை நடிகை அளித்த பாலியல் புகாரில் முன் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறும் புகார்தாரர், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், சமுதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலாக நடிகை செயல்பட்டு வருவதாகவும், மலேசியாவில் இதுபோல பலரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் உள்ளன என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த முன் பிணை மனு இன்று நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மணிகண்டனுக்கு, முன் பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்திருப்பதாக நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மணிகண்டன் மீதான விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் முன் பிணை வழங்க காவல்துறை தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து முன் பிணை வழக்கை ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை மணிகண்டனை கைது செய்ய கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், முன் பிணை தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்த மணிகண்டனுக்கு எதிராக கடந்த வாரம் துணை நடிகை ஒருவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார்.

அதில், அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்ததாகவும், அந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்ற போது, தன்னை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்ததாகவும் கூறியிருந்தார். தற்போது மணிகண்டன் திருமணம் செய்ய மறுப்பதுடன், அவருடன் இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்புணர்வு, பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jun 3, 2021, 6:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.