விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள கவிதா நகரில் கருப்பசாமிபாண்டியன் என்பவருக்குச் சொந்தமான குழாய் கம்பெனி உள்ளது. இந்தக் குழாய் கம்பெனியில் வைத்து சட்டவிரோதமாக புகையிலையை விநியோகம் செய்து வருவதாகத் தகவல் வந்தது.
தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர், வருவாய்த் துறையினர் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான்பராக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் இருக்கும் என வருவாய்த் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த குடோனில் வைத்து விற்பனை செய்து தப்பி ஓடிய கருப்பசாமிபாண்டியன், விவேக் ஆகிய இருவரையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர். புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்து சிவகாசி நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க...'கமல் ஒரு அரை வேக்காடு' - செந்தில் பாலாஜி தாக்கு