ETV Bharat / crime

கொலை வழக்கில் சிறை சென்று திரும்பியவர் படுகொலை!

ஓசூர் பேடரப்பள்ளியில் கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞரை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். கொலையாளிகளை தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

krishnagiri rowdy abi murdered by unidentified persons

author img

By

Published : Jun 19, 2021, 6:15 AM IST

கிருஷ்ணகிரி: கொலை வழக்கில் சிறை சென்று திரும்பிய இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஓசூர் பேடரப்பள்ளி பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க இளைஞர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்துத் தகவலறிந்து, சம்பவ இடத்திற்குக் காவல் துறையினர் விரைந்தனர்.

அங்குக் கொலை செயப்பட்டு கிடந்த உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணைமேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் அபி என்கின்ற அபிலாஷ் என்றும், பேடரப்பள்ளியில் 2020ஆம் ஆண்டு கிருஷ்ணா என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொலை வழக்கில், இவர் முதல் குற்றவாளியாக இருந்து சிறை சென்று திரும்பியது தெரியவந்தது.

மேலும் அபி ஓராண்டுக் காலம் குண்டர் சட்டத்தில் சிறையிலிருந்து, கடந்த இரு மாதங்களுக்கு முன்புதான் வெளியே வந்துள்ளார். இவ்வேளையில் இந்தக் கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு தப்பிச்சென்ற கொலையாளிகளைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.