ETV Bharat / crime

சொத்து விவகாரம் - எதிர்தரப்பினருக்கு ஆதரவாக முதியவரை மிரட்டும் போலீஸ்!

அண்ணா நகரில் உள்ள ரூ.14 கோடி மதிப்பிலான சொத்து விவகாரத்தில், தனது சகோதரருக்கு ஆதரவாக காவல்துறையினர் தன்னை மிரட்டுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் புகாரளித்துள்ளார்.

complaint against police in chennai
complaint against police in chennai
author img

By

Published : Jul 30, 2021, 6:41 AM IST

சென்னை: தன்னை சொத்துக்காக காவல் துறையினரின் உதவியுடன், சொந்த தம்பி மிரட்டுவதாக காவல் ஆணையரிடம் சுந்தர் புகார் தெரிவித்துள்ளார்.

அண்ணா நகர் எஃப் பிளாக் முதல் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் சுந்தர்(51). இவருக்கு குழந்தைகள் இல்லை. சுந்தரின் சகோதரரான அரவிந்த், தனது குடும்பத்தினருடன் அண்ணா நகர் 13ஆவது பிரதான சாலையில் வசித்து வருகிறார்.

சுந்தர் தங்கியிருக்கும் 14 கோடி மதிப்பிலான வீட்டை 1986 ஆம் ஆண்டு இவர்களது தந்தை, மகன்களான அரவிந்த், சுந்தர் ஆகியோருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர்களது தாயார் இறந்ததால், இறுதிச் சடங்கிற்காக சகோதரர் அரவிந்த் வீட்டிற்கு சென்றபோது, சுந்தரை மிரட்டி தனக்கு வீட்டை எழுதிவைத்து விடு என அரவிந்த் அவரது மகன்கள் ஷாவன், சர்வதாரி ஆகியோர் உடன் சேர்ந்து மிரட்டியதாக கூறியுள்ளார்.

இது குறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், புகாரை பெற்றுகொண்ட அண்ணா நகர் ஆய்வாளர் மாதேஸ்வரன் காளியப்பன், உதவி ஆய்வாளர் அய்யனார் ஆகியோர் தனது சகோதரரான அரவிந்திற்கு ஆதரவாக தன்னிடம் சொத்தை எழுதி கொடுத்துவிடுமாறு மிரட்டுவதாக சுந்தர் தன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

10 லட்சம் ரூபாய் மோசடி வழக்கு - பெண் காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஐந்து லட்ச ரூபாய்க்கு வீட்டை எழுதி கொடுத்துவிட்டு ஓடிவிடு, இல்லையென்றால் குழந்தைகள் இல்லாத உங்களை அனாதை பிணமாக்கி விடுவேன் என சகோதரர் மிரட்டுகிறார்” என்று கூறினார்.

சொத்தை முறைப்படி பாகப்பிரிவினை செய்வதற்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருக்கும் போது, காவல்துறை தலையிட்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டினார்.

ஏற்கனவே திருமங்கலம் காவல் துறையினர், தொழிலதிபரை கடத்தி சொத்தை அபகரித்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், அதுபோன்று மேலும் ஒரு சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.