ETV Bharat / crime

தனியார் பள்ளி ஆசிரியரின் சேட்டைகள் - போர்க்கொடி தூக்கிய முன்னாள் மாணவர்கள் - chennai kk nagar psbb rajagopalan

தனியார் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

chennai private school teacher sexual harassment issue

author img

By

Published : May 24, 2021, 12:36 PM IST

Updated : May 24, 2021, 12:42 PM IST

சென்னை: தனியார் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வருவதாக முன்னாள் மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இது குறித்து முன்னாள் மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், “சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்கிறார். அவர் பாலியல் ரீதியில் மாணவிகளை அணுகுகிறார். அவரின் செயல்பாடுகள் மாணவிகளை மனதளவில் வேதனைக்குள்ளாக்குகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது அனைவருக்கும் இணையம் வழிக் கல்வி கற்பிக்கப்படுவதால், மாணவிகளின் கைபேசி எண்கள் அனைத்தும் அந்த ஆசிரியரிடத்தில் உள்ளது. அந்த எண்களுக்கு மோசமான குறுந்தகவல்கள் அனுப்புவதையும் அந்த ஆசிரியர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், காணொலி வழியாக ஆசிரியர் வெறும் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு அரைநிர்வாணமாக பாடம் நடத்துவதாகவும் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாணவிகள் தங்களை வெளிப்படுத்த விரும்பாத நிலையில், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இந்த பிரச்னையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டும், ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவரை ஆசிரியரைப் பள்ளியின் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Last Updated : May 24, 2021, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.