ETV Bharat / crime

துப்பாக்கி முனையில் செல்போன் பறிக்க முயற்சி: வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!

சென்னை: கைத்துப்பாக்கி வைத்து மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேரை, பொதுமக்கள் பிடித்து, தர்மஅடி கொடுத்து காவல் துறையில் ஒப்படைத்தனர்.

துப்பாக்கி முனையில் செல்போன் பறிக்க முயற்சி: கைவரிசை காட்டி பொதுமக்கள்!

author img

By

Published : Mar 19, 2021, 10:15 AM IST

சென்னை, பாடி, கணபதி ராம் தெரு பகுதியில் நான்கு அடையாளம் தெரியாத நபர்கள், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை அடித்து கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டி, செல்போன் பறிப்பில் ஈடுபட்டிருந்தனர். சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய காவலர்கள் பிரசன்னகுமார், கணேசன் முருகன் ஆகிய இருவரும் அப்போதுதான் பணி முடித்துவிட்டு கோயம்பேடு நோக்கி வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அலறல் சத்தம் கேட்டு இருவரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் இருவர் வருவதைப் பார்த்த நான்கு பேரும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். இதில் இரண்டு திருடர்கள் தப்பி ஓடிய நிலையில், மற்ற இரண்டு திருடர்களையும் காவலர்கள் தனது இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளனர்.

ஒரு கட்டத்திற்குமேல் அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களே இரண்டு திருடர்களையும் பிடித்து, அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், பிடித்து வைத்திருந்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அயனாவரம் காவல் துறையினர், பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த இரண்டு திருடர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

துப்பாக்கி முனையில் செல்போன் பறிக்க முயற்சி: வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!

விசாரணையில் இருவரும் கொடுங்கையூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டி (32), முத்துபாண்டி (20) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வழிப்பறிக் கொள்ளைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, பொம்மைத் துப்பாக்கி எனவும் தெரியவந்தது. அதேபோல் தப்பி ஓடிய மற்ற இருவரையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க...விவசாயி வீட்டில் கத்திமுனையில் 25 சவரன் நகைகள் கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.