கன்னியாகுமரி: நித்திரவிளை அருகே விரிவிளை பகுதியை சேர்ந்தவர் அம்பி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், இன்று தனது இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது பதிவெண் இல்லாத டியூக் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரண்டு வாலிபர்கள் தெரு முக்கு பகுதியில் உள்ள தனியார் மண்டபம் அருகே, தம்பதி சென்ற வாகனத்தை இடித்து கீழே தள்ளி பெண்ணின் கழுத்தில் கிடந்த ஒன்பதரை சவரன் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
இருவரும் நிலைதடுமாறி சாலையில் ஓரம் இருந்த மண்டபத்தின் முன்பக்கம் இருந்த கம்பியில் மோதி கீழே விழுந்தனர். பலத்த காயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் நித்திரவிளை போலீசார் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை அந்த பகுதிகளில் பதிவாகி உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரயிலுக்குள் புகுந்து தந்தை.மகனை வெட்டிய ரவுடி கும்பல்...