சென்னை: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்கபடுவதாக பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் தனிப்படை அமைத்து காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், அவர் மல்லீஸ்வரி நகரை சேர்ந்த கார் ஓட்டுநர் வினோத்குமார் (34) என்பதும், கரோனா ஊரடங்கால் வேலையின்றி இருந்ததால் கஞ்சா பொட்டலங்களை விற்பதும் தெரியவந்தது.
இவர் வேளச்சேரி, திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி விற்றுவந்துள்ளார். அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: காவலர் லஞ்சம் - துறை ரீதியான நடவடிக்கை