மதுரை: மதுரையைச் சேர்ந்த சீத்தாராமன் என்பவர் மதுரை மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு ஜூன் முதல் 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அரசு வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.
அப்போது வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் பணம் பெற்றுக்கொண்டு செயல்பட்டதாகக் கூறி வழக்கறிஞர் சீத்தாராமன் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
வழக்குப்பதிவு
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சீத்தாராமன் பணியில் சேரும்போது இருந்த சொத்துமதிப்பு, பணியில் ஓய்வுபெறும்போது இருந்த சொத்து மதிப்பு ஆகியவற்றை ஆய்வுசெய்ததில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து முன்னாள் அரசு வழக்கறிஞரான சீத்தாராமன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: டிக் டாக் வீடியோவால் ஆயுதப்படை துணை ஆணையர் பணியிட மாற்றம்