பரேய்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் (கட்டட ஒப்பந்ததாரர்) கடந்தாண்டு ஆகஸ்ட் 19-20 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் பதான்கோட் தர்யல் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார்.
இந்தத் கொடூரத் தாக்குதலில் படுகாயமுற்ற அசோக் குமாரின் மகன் கௌசால் (ரெய்னாவின் அத்தான்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தக் கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய சிறப்பு விசாரணை படையை உத்தரப் பிரதேச அரசு நிறுவியது. இவர்கள் பஞ்சாப் போலீசாருடன் இணைந்து கூட்டு முயற்சியில் குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் சாஜூ என்ற சைமார் என்பவரை பெகேரி காவல் நிலைய எல்லைக்குள் காவலர்கள் கைதுசெய்தனர். இதற்கிடையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை கைதுசெய்துள்ளதாக பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச சிறப்பு விசாரணை படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு கொலைக்கு பின்னர், ஹைதராபாத்தில் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சுரேஷ் ரெய்னா உறவினர் கொலை: அப்டேட்டை உறுதிசெய்த பஞ்சாப் முதலமைச்சர்