ETV Bharat / crime

உதயநிதி களமிறங்கும் தொகுதியில் அதிமுகவினர் பணபட்டுவாடா: வீடியோ வைரல் - sembakkam voters news

சென்னை: திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுகவினர் தங்கு தடையில்லாமல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ வைரல்: உதயநிதி தொகுதியில் அதிமுக-வின பணபட்டுவாடா!

author img

By

Published : Mar 19, 2021, 10:26 AM IST

Updated : Mar 19, 2021, 9:54 PM IST

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக சார்பில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் கசாலியும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலராக உள்ள ஜெ.எம்.பஷீர் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் காணொலி தற்போது வெளியாகியுள்ளது. சேப்பாக்கம் தொகுதி தானா என உறுதி செய்து கொண்ட பின்னரே ,அங்கு உள்ள பெண் வாக்காளர்களுக்கு ஜெ.எம் பஷீர் பணம் வழங்குகிறார்.

உதயநிதி களமிறங்கும் தொகுதியில் அதிமுகவினர் பணபட்டுவாடா: வீடியோ வைரல்

சேப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட ஒரு வீட்டில் பெண்களுக்கு அதிமுக சார்பில் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்துடன் 500 ரூபாய் நோட்டுகளை வழங்கும் காட்சி இதில் பதிவாகியுள்ளது.

இது குறித்து அண்ணாசாலை காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 171(பி) பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க...விவசாயி வீட்டில் கத்திமுனையில் 25 சவரன் நகைகள் கொள்ளை

Last Updated : Mar 19, 2021, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.