ETV Bharat / crime

‘டாஸ்மாக் கடை அமைக்காவிடில் தீக்குளிப்பேன்’ - போதை ஆசாமி  அட்ராசிட்டி - Atrocities drunkard on the road in Manal medu

மணல்மேட்டில் டாஸ்மாக் கடை அமைக்காவிடில், தீக்குளிப்பேன் என்று போதை ஆசாமி ஒருவர் சாலையின் நடுவே புலம்பி ஆதங்கப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

போதை ஆசாமி
போதை ஆசாமி
author img

By

Published : Jul 7, 2022, 1:28 PM IST

மயிலாடுதுறை: மணல்மேடு சுற்றுவட்டார பகுதியில் ஆத்தூர், மல்லியக்கொல்லை ஆகிய இரு இடங்களில் மட்டும் டாஸ்மாக் மதுபான கடை உள்ளன. இந்நிலையில், மணல்மேடு கடைவீதியில் பொதுமக்கள் அதிகமாக செல்லும் சாலையில் போதை ஆசாமி ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், அதிக விலை கொடுத்து மதுபானம் வாங்கி குடிப்பதாகவும், மணல்மேட்டில் டாஸ்மாக் கடை அமைக்காவிடில், தீக்குளிப்பேன் என்றும் தகாத வார்த்தைகளில் அவர் புலம்பி ஆதங்கப்படுகிறார். சுட்டெரிக்கும் வெயிலில் தார் சாலையில் அமர்ந்திருக்கும் அவர் குடிப்பதற்கு முன்பு தலையில் குளிர்ந்த நீரை ஊற்றிக்கொண்டு, மதுவையும் தீர்த்தம்போல தலையில் நனைத்துக் கொண்டு குடிக்கத் தொடங்கினார்.

'எங்கள் பகுதியில் டாஸ்மாக் வைக்கலனா தீக்குளிப்பேன்' - போதை ஆசாமி செய்த ரகளை

பின்னர் சகஜமாக கையில் வைத்திருந்த மிக்ஸரை சுவைத்து விட்டு, காலி பாட்டில், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை சாலையிலேயே போட்டு விட்டு அங்கிருந்து சென்றார். நடுரோட்டில் கால்களை சொகுசாக நீட்டி வீட்டில் அமந்திருப்பதைப்போல அமர்ந்திருந்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் முகம் சுழித்தபடி சென்றனர்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூடுக!' - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.