பெங்களூர்: பாலியல் தொடர்பான காணொலியில் சிக்கி பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் மீது கொடுத்த புகாரை, சமூக செயற்பாட்டாளர் திரும்பப் பெற்றுக்கொண்டார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி மீது, பெண் ஒருவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு புகார் அளித்தார். இந்தப் புகாரை திட்டவட்டமாக அமைச்சர் மறுத்தார். இதுதொடர்பாக வெளியான காணொலியும் போலியானது எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் தருணத்தில் தான் பதவியை மட்டுமல்ல அரசியலை விட்டே விலகுவேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் அமைச்சர் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் அமைச்சர் ரமேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான ராஜினாமாவை இரண்டே மணி நேரத்தில் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா ஏற்றுகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.