ETV Bharat / crime

500 கிலோ இரும்பு பாலத்தை திருடிய திருடர்கள்!

பிகாரில் 500 கிலோ இரும்பு பாலத்தை திருடர்கள் திருடி அல்லேக்காக தூக்கிச் சென்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 500 கிலோ இரும்பு பாலத்தை திருடிய திருடர்கள் குறித்து பார்க்கலாம்.

author img

By

Published : Apr 9, 2022, 5:11 PM IST

bridge
bridge

பாட்னா: பிகாரின் ரோஹ்டாஸ் மாவட்டத்தில் அமியவார் கிராமத்தில், அராஹ் கால்வாய் மீது 60 அடி தூரத்திற்கு கடந்த 1972ஆம் ஆண்டில் இரும்பு பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது பாலம் பலவீனமடைந்துவிட்டதால் பயன்பாட்டிற்கு உகந்தது இல்லை.

ஆபத்தானது என அறிவிக்கப்பட்டது. இதனால், அந்த பாலத்தில் யாரும் நடந்து செல்வது இல்லை. அருகில் கட்டப்பட்ட புதிய பாலத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் இந்தப் பாலத்தை கடந்த 3 தினங்களாக தீவிர முயற்சி மேற்கொண்டு திருடர்கள் திருடிச் சென்று கிட்டத்தட்ட 500 கிலோ வரை கொள்ளையடித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவலர்கள் தரப்பில், “திருடர்கள், மூன்று நாட்களாக கேஸ் கட்டர்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரத்தின் மூலம் பாலத்தை இடித்து அள்ளி சென்றனர்” என்றனர். மேலும், இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் காவலர்கள் விசாரணை நடத்திவருகிறோம் என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை உயர் அலுவலர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருட்டு நடந்த இடங்களில் தடயங்களை சேகரிக்கும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர். பாலம் திருடப்பட்ட சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

சினிமா படமொன்றில் நகைச்சுவை நடிகர் கிணற்றை காணவில்லை என்பார். இது நகைச்சுவை காட்சியாக பார்க்கப்பட்ட நிலையில் பிகாரில் உண்மையிலேயே பாலம் ஒன்று மாயமாகியுள்ளது. இதற்கிடையில் பாலம் திருடப்பட்ட சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் பல பகுதிகள் திருடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க : செல்போன் கடையில் கவுபார் கொள்ளையர்கள் கைவரிசை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.