தெலங்கானா/சத்தீஸ்கர்: சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் சக வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள லிங்கம்பள்ளி கிராமத்தில் உள்ள சிஆர்பிஎஃப் 50ஆவது பட்டாலியன் முகாமில் அதிகாலை 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக பஸ்தர் ரேஞ்ச் காவல் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட தகவலின்படி, ஒரு சிஆர்பிஎஃப் வீரர் ஏகே-47 துப்பாக்கியால் சக வீரர்களை சுட்டதாக உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வீரர் உடனடியாக கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படுகாயமடைந்த ஊழியர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடற்கரையில் அரை நிர்வாணமாக பெண் ஆர்ப்பாட்டம்