ETV Bharat / crime

ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை! - சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறை விசாரணை

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியை தாக்கிவிட்டு 24 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

gold theft
gold theft
author img

By

Published : Feb 7, 2021, 10:58 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கக்கனுா் பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் அகில்குமார்- பிரீத்தி தம்பதி வசித்து வருகின்றனர். அகில்குமார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். நேற்றிரவு (பிப்.6) முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்து அகில்குமார், அவரது மனைவியை கத்தி முனையில் மிரட்டி 24 சவரன் தங்க நகை மற்றும் 12ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, அகில்குமாரும், அவரது மனைவியும் கை, கால்கல் கட்டப்பட்ட நிலையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பகலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதி வெளியிட்ட WWW பட டீசர்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.