நாகப்பட்டினம்: தெத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹபீப் கனி. இவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் 26 ஆடுகளை வளர்த்து அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் அலி என்பவரது வீட்டு வாசலுக்கு ஆடுகள் அடிக்கடி செல்வதால், இரண்டு குடும்பத்திற்கும் சில மாதங்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது என கூறப்படுகிறது.
இந்நிலையில், நஞ்சு கலந்த தீவனத்தை உட்கொண்ட 10 ஆடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதுகுறித்து ஹபீப் கனி, நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அப்பகுதியை சேர்ந்த மும்தாஜ் பேகம், அப்பாஸ் அலி ஆகிய இருவரையும் நாகூர் காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.
உயிரிழந்த ஆடுகள் உடற்கூராய்விற்காக தஞ்சாவூர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 16 ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன.
இதையும் படிங்க: பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் குண்டு வீச்சு - நடந்தது என்ன?