ETV Bharat / crime

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் 125 சவரன் தங்கம் கொள்ளை - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் ரூ.50 லட்சம் மதிப்புடைய 125 பவுன் தங்க நகைகள், ரூ. 20 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் 125 சவரன் தங்க நகைகள், ரூ.20லட்சம் பணம் கொள்ளை

author img

By

Published : Aug 27, 2022, 11:59 AM IST

காஞ்சிபுரம் மாவட்டம் காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (52). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான கணபதி குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்புடைய 125 சவரன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள், 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதன்பின் அவர் மாகறல் போலீசாருக்கு புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் 54 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.