ETV Bharat / crime

எளாவூர் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

author img

By

Published : Mar 18, 2021, 12:23 PM IST

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில், 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா பறிமுதல்
நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் காவல் துறையினர் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை மறித்து சோதனை மேற்கொண்டபோது, காரில் பயணித்த செங்கல்பட்டை சேர்ந்த சரின் (19) என்பவர் மறைத்து வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு சென்று திரும்பிய வாடகை காரை, ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டை பகுதியில் வழிமறித்து, சென்னையில் விடுமாறு உதவி கேட்டு ஏறியதாகவும், கஞ்சாவை நெல்லூரிலிருந்து வாங்கி செங்கல்பட்டு பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு செல்வதாகவும், சரின் தெரிவித்தார்.

இந்நிலையில் கஞ்சா கடத்தலில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் காவல் துறைனர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தம்பி மனைவி மீது சுடுதண்ணீரை ஊற்றிய அண்ணன் - சிசிடிவி வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.