வேலூர்: திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். வேலூரில் அமைச்சராக உள்ள கே.சி.வீரமணி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. மாறாக சொத்து சேர்பதிலும், நிலங்களை வளைப்பதிலேயே முழு வேலையாக உள்ளார். உள்ளாட்சி துறை அமைச்சர் ஊழல் துறை அமைச்சராக உள்ளார் என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.
எதிர்வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக தனது இரண்டாம் கட்ட பரப்புரையான "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற பரப்புரை நிகழ்ச்சியை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.30) வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி கிராமத்தில் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டில் தற்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருப்பவர் ஊழல் துறை அமைச்சராக உள்ளார்.
கரோனா காலத்தில் ஊழல் செய்து துடப்பம், பிளீச்சிங் பவுடரிலும் கொள்ளை அடித்துள்ளார்கள். இந்த ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நத்தவில்லை. அதனால் பல பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராக இருந்த போது கூட நீட் தமிழ்நாட்டில் நுழையவில்லை. ஆனால் எடப்பாடி ஆட்சியில் பாஜகவுக்கு வாழ்பிடிக்கிற அடிமை ஆட்சியில் நீட் கொண்டுவரப்பட்டது. இதையும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்யப்படும். இந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் கே.சி.வீரமணி தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு மாவட்டத்திற்கு எந்த வித நல்லதையும் செய்ய முன்வரவில்லை. அவருக்கு சொத்து சேர்பதிலேயே குறியாக உள்ளார். நிலங்களை வளைத்து வாங்குதில் கெட்டிக்காரர். இதை முழு வேலையாக செய்து வருகிறார்.
உதாரனமாக வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்து விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு பஞ்சாயத்து செய்தார். இது உயர்நீதிமன்றம் வரை சென்றது. இது தான் அவரின் மாபெரும் புகழ். அவரது கல்லூரி கட்ட ஆற்று மணலை கொள்ளை அடித்தது, ஏலகிரியில் உள்ள பெப்சி குடோனை மிரட்டி வாங்கியது என விரோதமான செயல் செய்தது பட்டவர்த்தனமாக தெரிகிறது.
இங்கு வந்துள்ளவர்கள் எல்லாம் என்மீது நம்பிக்கை வைத்து வந்துள்ளீர்கள். மக்களின் நம்பிக்கையை நான் எனது சொத்தாக பார்க்கிறேன். அந்த நம்பிக்கையை நிச்சயமாக நான் காப்பாற்றுவேன். தற்போது மக்களிடம் நான் பெற்று வரும் கோரிக்கை மனுக்களை எல்லாம் திமுக ஆட்சிக்கு வந்ததும் தனிவாரியம் தனி இலாக்க நிர்ணயிக்கப்பட்டு தொகுதி வாரியாக முகாம் அமைத்து விசாரித்து பொது மக்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் தமிழ்நாட்டில் 1 கோடி குடும்பங்களின் பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும்.
இதை அண்ணா, கருணாநிதி முக்கியமாக தமிழ்நாட்டு மக்களின் மீது ஆணையாக கூறுகிறேன். கடந்த 10 ஆண்டில் அதிமுக அரசு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை. இதனால் இளைஞர் சக்தி வீணாகிவிட்டது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலின் போது நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நான் இன்னும் மறக்கவில்லை. மக்கள் கடனை ரத்து செய்தால் அரசு நிதி நெருக்கடியை சந்திக்காதா எனக் கேட்பவர்கள், மத்திய அரசு பெரிய பெரிய கார்பரேட் நிறுவனத்தின் லட்ச கணக்கான கோடி கடனை ரத்து செய்வது குறித்தும் கேட்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : முக ஸ்டாலின் வேல் பிடித்ததில் தவறில்லை- ஈஸ்வரன்