ETV Bharat / state

'கூட்டணிக்கு காசு'.. அந்த அவசியம் அதிமுகவுக்கு இல்லை - உதயநிதிக்கு ஜெயக்குமார் பதிலடி!

பணத்தை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் (கோப்புப்படம்)
ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu, @Udhaystalin X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சென்னை: சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், '' உலகம் முழுவதும் பேசப்பட்ட, அனைத்து தரப்பு மக்களால் ஏற்றுக்கொண்ட தலைவி ஜெயலலிதா. பல்வேறு திட்டங்களை படைத்து, அனைத்து மக்களிடமும் அன்பாகவும், தனது வாழ்நாளில் அனைத்து மக்களும் போற்றப்படக்கூடிய முதலமைச்சராகவும் இருந்த அவர் 2016 டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்தது தமிழர்களுக்கு பேரிடியாக அமைந்தது.

அவரது நினைவு நாள், டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்த உள்ளோம்.

புகழஞ்சலி காலை 9.30 மணி அளவில் இருந்து 11 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கு பாதுகாப்பு உள்ளிட்ட சட்ட ரீதியான அனுமதி வழங்க கோரி மனு அளித்தோம். டிசம்பர் 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை உறுதிமொழி உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்க வேண்டி மனு கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.'' என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதியதில் 5 பேர் பலி.. மாமல்லபுரம் அருகே கொடூர விபத்து!

கரையான் ஆட்சி

தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், ''நாம் தவறு செய்தால், உடனடியாக காவல் துறையினர் நீதிமன்றம் மூலமாக நமக்கு தண்டனை கொடுப்பார்கள் என்ற எண்ணம் தற்போது இல்லை. அதனால், அதிக குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் நடப்பது கரையான் ஆட்சி'' என்றார்.

முன்னதாக இன்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், '' அதிமுக கள ஆய்வு நடத்துகிறோம் என கூறிக்கொண்டு கலவர ஆய்வு தான் நடத்திகொண்டு இருக்கிறார்கள். அவர்களின் அனைத்து நிகழ்சிகளில் சண்டை தான் நடக்கிறது. அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் '' கூட்டணிக்கு அழைத்தால் 100 கோடி கேட்கிறார்கள் 20 தொகுதி கேட்கிறார்கள்'' என பேரம் பேசுவதாக வெளிப்படையாக பேசுகிறார். ஆனால், நம்முடைய கூட்டணி வெற்றிக் கூட்டணி'' என கூறியிருந்தார்.

ஜெயிக்கும் குதிரை

இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், '' இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் அவரை பற்றி பேசக்கூடாது என பார்க்கிறேன். இதைப் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. பணத்தை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை, அதிமுகவை தேடி தான் கூட்டணிக்கு வருவார்கள், ஜெயிக்கும் குதிரையில் தான் பந்தயம் கட்டுவார்கள்'' என பதிலளித்தார்.

மேலும், அதானி விவகாரத்தில் திமுக ஏன் மௌனம் காக்கிறது என தெரியவில்லை.. தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. மீனவர்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை பற்றி திமுக பேசவில்லை. அதிமுகவில் யாரும் பிரிந்து செல்லவில்லை.. பொதுக்குழுவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். சசிகலா, ஓபிஎஸ், டிடிவி மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களை தவிர மற்றவர்களை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார் என தெரிவித்த ஜெயக்குமார் தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணிணி திட்டம் உள்ளிட்ட பல அதிமுக திட்டங்களை திமுக முடக்கி உள்ளது'' என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.