ETV Bharat / city

திமுக மீது களங்கம் ஏற்படுத்தவே தேர்தல் நிறுத்தப்பட்டது - உதயநிதி ஸ்டாலின் - திமுக இளைஞரணித் தலைவர்

வேலூர்: திமுக மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் நிறுத்தப்பட்டது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Udaynidhi stalin
author img

By

Published : Jul 31, 2019, 11:15 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அவர் திமுக தலைவரும் தனது தந்தையுமான மு.க. ஸ்டாலினைப் போன்று சாலையில் நடந்தபடி மக்களைச் சந்தித்தும் கிராமங்களில் மரத்தடியில் அமர்ந்தும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தும் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிக்கிறார். அதன்படி இன்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பென்னாத்தூர் பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின்

அப்போது மரத்தடியில் பொதுமக்களை வரவழைத்து அவர்கள் முன்பாக அவர் பேசுகையில், ’வேண்டுமென்றே திமுக மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இந்த தேர்தலிலும் அதுதான் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடியின் அடிமைகளாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரா? என கேள்வி எழுப்பினார். பின்னர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பி வருகின்றனர். எனவே இந்த தேர்தலிலும் திமுக வேட்பாளரையே வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கூறினார்.

Intro:வேலூர் தேர்தலில் தந்தை பாணியில் வாக்கு சேகரிக்கும் உதயநிதி ஸ்டாலின்
Body:வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக வேலூர் மாவட்டத்தின் பல இடங்களில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார் அப்போது அவர் தனது தந்தையும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் போன்று சாலை மார்க்கமாக நடந்தபடி மக்களைச் சந்தித்தும் கிராமங்களில் மரத்தடியில் அமர்ந்தும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தும் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிக்கிறார் அதன்படி இன்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பென்னாத்தூர் பகுதிகளில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது மரத்தடியில் பொதுமக்களை வரவழைத்து அவர்கள் முன் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில், " வேண்டுமென்றே திமுக மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது தற்போது இந்த தேர்தலிலும் அதுதான் நடைபெற உள்ளது பிரதமர் மோடியின் அடிமைகளாக ஓபிஎஸ் இபிஎஸ் உள்ளனர் எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரா? தி.மு.க பாராளமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் உரிமைக்காக பாராளுமன்றத்தில் ஓங்கிக் குரல் எழுப்பி வருகின்றனர் எனவே நீங்கள் வேலூர் திமுக வேட்பாளரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.