வேலூர் சவலன்பேட்டையைச் சேர்ந்த கணேஷ், அதே பகுதியில் உள்ள சாதுகாரமடம் தெருவில் நகை அடகு மற்றும் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (பிப்.25) மாலை அதே பகுதியை சேர்ந்த காலாசா (37) என்பவர் மதுபோதையில் கையில் சவரக்கத்தியுடன் கணேஷின் நகைக்கடையில் நுழைந்து 50 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கணேஷின் நகை கடைக்குள் நுழையும் காலாசா "50 ரூபாய் கொடு" என முதலில் ஆரம்பித்து பின்னர் கெஞ்சி பார்க்கிறார். நீண்ட நேரம் ஆகியும் 50 ரூபாயை கணேஷ் கொடுக்க மறுக்கே "50 ரூபா கொடுக்குறியா இல்ல அறுத்துடவா" என மிரட்டும் தொனியில் ஆரம்பிக்கிறார். இதற்கும் மசியாத கடை உரிமையாளர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட காண்டாகிய காலாசா "நான் நியாயமா தான கேக்குறேன் 50 ரூபா கொடுத்துறு" என மீண்டும் தன் பக்க நியாயத்தை விளக்கி 50 ரூபாய் கேட்கிறார்.
இறுதியில் கையில் வைத்திருந்த சவரக்கத்தியோடு கடை உரிமையாளரை பலமாக தாக்க முயற்சிக்கிறார். அப்போது காலாசாவை பதிலுக்கு கடை உரிமையாளரும் கையில் கட்டையுடன் எதிர்க்கிறார். பின்னர் ஒருவர் வந்து கலாசாவை கூட்டிச் செல்கிறார்.
இச்சம்பவம் தொடர்பாக சலவன்பேட்டை சாதுகாரமடம் தெருவை சேர்ந்த அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் ரவுடி காலாசா கடந்த மூன்று மாதங்களாக கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டி வருகிறார். அந்தவகையில் இன்று (பிப். 25) நகைக் கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே ரவுடி காலாசா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வேலூர் தெற்கு காவல் துறையினர் காலாசாவை அழைத்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க...2.5 கோடி மோசடி செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கைது!