ETV Bharat / city

வேலூர் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...! - தேர்தல் உலா 2021

இந்தியா, தமிழ்நாடு வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் மாவட்டம் வேலூர். பல்லவர்கள் தொடங்கி, பிஜப்பூர் சுல்தான்கள், பின்னர் வெள்ளையர்கள் என, பலரின் ஆளுகைக்குள் இருந்த வேலூர், பல கலாச்சார வரலாற்று எச்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. பல போர்களின் வடுக்களை தன் நீண்ட வரலாற்றில் தாங்கி நிற்கும் வேலூரில் தான், 1806ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்கான முதல் விதை விழுந்தது. வரலாற்றுப் பெருமையும், சிறப்பும் கொண்டது வேலூர். மாவட்டத்தின் தற்போதைய எல்லையாக, வடக்கில் ஆந்திரா, தெற்கில் திருவண்ணாமலை, மேற்கில் திருப்பத்தூர், கிழக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டையும் அமைந்துள்ளன. மாவட்டத்தின் முக்கியத் தொழில் விவசாயம்.

vellore district watch
வேலூர் தொகுதிகள் உலா
author img

By

Published : Mar 11, 2021, 7:34 PM IST

Updated : Mar 14, 2021, 4:49 PM IST

வாசல்

வேலூரிலிருந்து, கடந்த 2019ஆம் ஆண்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைப் பிரித்தப் பின்னர், வேலூரில் ஒரு மக்களவைத் தொகுதியும், இரண்டு தனித் தொகுதிகள் உட்பட ஐந்து சட்டபேரவைத் தொகுதிகள் உள்ளன.

தொகுதிகள் வலம்:

காட்பாடி:

வேலூர் மாட்டத்தின் நட்சத்திர தொகுதியாகக் காட்பாடி தொகுதி விளங்குகிறது. திருவள்ளூவர், விஐடி பல்கலைக்கழகங்கள், காட்பாடி ரயில் நிலையம், கிருபானந்த வாரியார் பிறந்த காங்கேநல்லூரில் உள்ள முருகன் கோயில் என, பல சிறப்புகளைக் கொண்ட தொகுதி இது. ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள இந்தத் தொகுதியின் பிரதானத் தொழில் விவசாயம்.

காட்பாடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும். காட்பாடி ரயில் நிலையம் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, அங்கு அகலமான புதிய ரயில் பாலம் அமைக்க வேண்டும். சத்துவாச்சேரி பகுதியில் பாலாற்றின் குறுக்கே பாலங்கள் கட்ட வேண்டும்.

தொகுதியில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை தொடங்கப்பட வேண்டும். மூடப்பட்டுள்ள தமிழ்நாடு வெடிப்பொருள் நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பன தொகுதியின் கோரிக்கைகளாக உள்ளன. திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன் தொடர்ந்து ஐந்து முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

வேலூர் தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

வேலூர்: இடைக்காலச் சோழர்கள் தொடங்கி, பிற்காலச் சோழர்கள், திப்பு சுல்தான் வரை பல அரசுகளுக்குப் போர்ப்படை தளமாக விளங்கியது வேலூர். இங்குள்ள கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில், கோட்டை அருங்காட்சியகம், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆகியவை வேலூரின் பெயர் சொல்லும் அடையாளங்கள்.

வேலூர் தொகுதியின் முக்கியப் பிரச்னை குடிநீர் தட்டுப்பாடு. வேலூரில் விநியோகிக்கப்படும் குடிநீரை முறையாக ஒரே நேரத்தில் வழங்குவதோடு, கழிவுநீர் கலந்து வரும் குடிநீர் பிரச்னையை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

இங்கு கழிவுநீர் கால்வாய்கள் சரியில்லாததால், கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நோய்த் தொற்று ஏற்படுகின்றது. மழைக் காலங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து பெரும் சிக்கலை ஏற்படுத்திவருவது தொடர்கிறது.

அணைக்கட்டு: சிரிபுரம் தங்க கோயில், அரசு மருத்துக்கல்லூரி ஆகியவை தொகுதிக்கான அடையாளங்களாகும். மலைவாழ் மக்களை அதிமாக கொண்டுள்ள இந்தத் தொகுதி விவசாயத்தைச் சார்ந்துள்ளது.

நெல், வாழை, கொய்யாவும், மலைப் பகுதிகளில் பழவகைகள், தேன், பயறு வகைகள் விளைவிக்கப்படுகின்றன. கால்நடை வளர்ப்பும் நடைபெறுகிறது. இத்தொகுதியில் உள்ள பீஞ்சமந்தை, ஜார்தான்கொள்ளை, அல்லேரி ஆகிய பகுதிகளில் சரியான சாலை அமைத்து தரப்பட வேண்டும்.

கல்வி மற்றும் மருத்துவ வசதிகளில் பின்தங்கியிருக்கும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும், அதற்கான வசதிகள் ஏற்படுத்தித் தரவில்லை என்கின்றனர் தொகுதிவாசிகள்.

கீழ்வைத்தியனான்குப்பம்(தனி) : தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பின்னர் காட்பாடி, குடியாத்தம் தொகுதிகளில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தனி தொகுதி இது. முழுவதும் கிராமங்களையே கொண்ட தொகுதி.

வளர்ச்சியில் பின் தங்கிய தொகுதியும் கூட. விவசாயமே பிரதான தொழில். மாம்பழம் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தொகுதிவாசிகளின் பிரதான கோரிக்கைகள் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள கீழ்வைத்தியனான்குப்பத்திற்கு (கே.வி.குப்பம்) கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும்.

இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தாலுகா மருத்துவமனையாக மாற்ற வேண்டும். தொகுதிகுள் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். பெண்களுக்குத் தனியாக அரசுக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும். இங்குள்ள மூன்று ஊராட்சிகளுக்கும் சேர்த்து, ஒரே ஒரு மயானம் தான் உள்ளது. அதிலும் போதிய இடவசதி இல்லை. இதனால் புதிய மயான பூமி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன கோரிக்கையாக உள்ளன.

குடியாத்தம்(தனி): வேலூர் மாவட்டத்தின் பழமையான தொகுதி. கடந்த1954ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்க, இடைத்தேர்தலில் காமராஜரை வெற்றி பெற வைத்து கோட்டைக்கு அனுப்பி வைத்த தொகுதி.

இந்தியா விடுதலை அடைந்த போது, டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி தயாரிக்கப்பட்ட ஊர் குடியாத்தம். விவசாயம், கைத்தறி நெசவு, பீடி சுற்றுதல், தீப்பெட்டி தொழில், தோல் தொழில் ஆகியவை பிரதான தொழில்கள்.

பிரத்யேகத் தயாரிப்பான லுங்கிகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து, அந்நிய செலாவணி ஈட்டும் குடியாத்தம் தொகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.

குடியாத்தம் நகராட்சி, கொண்ட சமுத்திரம் பஞ்சாயத்து பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அம்மணாங்குப்பம் ஏரியில் கலக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன இம்மக்களின் நிறைவேறாதக் கோரிக்கைகளாகவுள்ளன.

களநிலவரம்:

மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல், குடிநீர் பிரச்னைகளுடன், லுங்கி மற்றும் தீப்பெட்டித் தயாரிப்பு பொருட்களுக்கான இடுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். தனித் தொகுதிகளில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும், நறுமணப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்கப்பட வேண்டும் என்று தொகுதிகள் வாரியாக கோரிக்கைகள் இருக்கின்றன.

மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதிகளில் நான்கில் திமுகவும், தனித் தொகுதியான கே.வி.குப்பத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் போட்டியிடவுள்ள காட்பாடி தொகுதியில், அவருக்கே வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும், அவரிடமிருந்து தொகுதியை தட்டிப் பறிக்க அதிமுகவும் சளைக்காமல் ஈடுகொடுக்கும்.

வேலூர் தொகுதியில் பிரம்மாஸ்திர வேட்பாளரை களம் இறக்கியிருக்கிறது அதிமுக. அவரிடமிருந்து வெற்றியை தட்டிப்பறிக்க திமுக பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். தனித்தொகுதியான குடியாத்தத்தில் இரண்டு கட்சிகளும் சமபலத்தில் இருந்தாலும், அதிமுகவிற்கான வாய்ப்பு கொஞ்சம் கூடுதல்.

முந்தைய வெற்றியின் பலத்தில் திமுகவும், வெற்றிகளைத் தட்டிப்பறிக்கும் முனைப்பில் அதிமுகவும் வேலூரில் களம் காண்கின்றன.

Last Updated : Mar 14, 2021, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.