ETV Bharat / city

வட தமிழ்நாட்டில் பல பரிசுகளை வென்ற வேலூர் மாவட்ட காளை உயிரிழப்பு! - காளை உயிரிழப்பு

வட தமிழ்நாட்டில் எருது விடும் விழாக்களில் பல பரிசுகளை வென்ற வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த சங்கீதா எக்ஸ்பிரஸ் காளை உயிரிழந்தது.

வட தமிழ்நாட்டில் பல பரிசுகளை வென்ற வேலூர் மாவட்ட காளை உயிரிழப்பு!

author img

By

Published : Mar 30, 2022, 8:14 AM IST

வேலூர்: மேல்மொணவூரை சேர்ந்தவர் சகாதேவன். இவர் பல ஆண்டுகளாக காளைகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான சங்கீதா எக்ஸ்பிரஸ் என்னும் காளை கடந்த சில ஆண்டுகளாக வட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற எருது விடும் விழாக்களில் பங்கேற்று, முதல் பரிசை தட்டிச் சென்றது.

குறிப்பாக 2018ஆம் ஆண்டில் 21 இடங்களில் இக்காளை முதல் பரிசை வென்று, காளை பிரியர்கள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்களிடையே நீங்காத இடத்தைப் பெற்றது.

வட தமிழ்நாட்டில் பல பரிசுகளை வென்ற வேலூர் மாவட்ட காளை உயிரிழப்பு

இந்நிலையில் சில நாள்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட இக்காளை நேற்று(மார்ச் 30) காலை திடீரென உயிரிழந்தது. இது ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'கலைக்கு சாதி, மதப்பிரிவினை உண்டா? - கேரளாவில் சம்பவம்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.