வேலூர்: காட்பாடி பகுதியில் உள்ள குப்பத்தாமோட்டூர் கிராமத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் 1994ஆம் ஆண்டு முதல் அரசு வழங்கிய பட்டா நிலத்தில் வசித்து வருகின்றனர். இதில் ஒருவரான ஜீவா (52) என்ற பெண் அப்பகுதியில் வீடுகட்டி வாழ்ந்து வருகிறார்.
இவரது வீட்டைத் தாண்டி தான் அண்ணாமலை என்பவரது வீடும், நிலமும் உள்ளது. நீண்ட காலமாக இருளர் சமுதாய மக்கள் அங்கு வசிப்பது அவர்களுக்குத் தொந்தரவாக இருந்ததால் வீட்டை காலி செய்யும்படி பலமுறை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
இச்சூழலில் நவ.06ஆம் தேதி காலை 7 மணியளவில் அண்ணாமலை, அவரது மகன்கள் வேலுமணி, வெங்கடேசன் ஆகிய மூவரும் சேர்ந்து ஜீவாவின் வீட்டின் முன் இருந்த மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். இதனை தடுக்கச் சென்ற பெண்ணை அடித்து கீழே தள்ளி திட்டி மிரட்டியுள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார்
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அண்ணாமலை, அவரது மகன்களிடம் விசாரணை நடத்தி, எச்சரித்துச் சென்றனர்.
இருப்பினும் மீண்டும் நேற்று (நவ. 07) காலை வெங்கடேசன் என்பவர் அத்துமீறி ஜீவாவின் வீட்டினுள் நுழைந்து கதவை உடைத்து பாத்திரங்களை வெளியே எறிந்தும், வீட்டில் இருத்து சாலைக்கு செல்லக்கூடிய பாதையை வேலி போட்டு மறைத்தும் உள்ளனர். இதுதொடர்பாக திருவலம் காவல் துறையினரிடம் ஜீவா புகார் அளித்தார்.
இதையும் படிங்க: 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்: குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு